ஆண்,பெண் வெள்ளைபடுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் தீர்வு
ஆண், பெண் என இருபாலருக்கும் வெள்ளை படுதல் உண்டாகிறது. இயல்பான வெள்ளைப்படுதல் சில நாட்களிலேயே மறைந்து விடுவதுடன், அரிப்போ, நாற்றமோ ஏற்படுவதில்லை. ஆனால் தொற்றினால் ஏற்பட்ட வெள்ளையினால் துர்நாற்றம், நிறமாற்றம் உண்டாவதுடன் தேவையற்ற பன்கிருமித்தொற்றும் ஏற்படுகிறது. இதற்கு முறையான ரத்தப்பரிசோதனையும், திசு பரிசோதனையும் அவசியமாகும். இனப்பெருக்க உறுப்புகளை கடுக்காய்ப் பொடி அல்லது படிகாரத் தண்ணீரால் அவ்வப்போது கழுவி, சுத்தம் செய்வது நல்லது. கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. நெர்விலியா அரோகோயானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆர்கிடேசியே குடும்பத்தை சார்ந்த தரைப்படர் கொடிகளின் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன. பிரŒவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன. 5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1...